ஐஸ் கிரிக்கெட் முதலாவது போட்டியில் அப்ரிடி தலைமையிலான ரோயல்ஸ் அணி வெற்றி (Photos)


01

உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அப்ரிடி தலைமையிலான ரோயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் அமைந்துள்ள அழகான பகுதி செயின்ட் மோரிட்ஸ் ரிசார்ட். கடல் மட்டத்தில் இருந்து 5910 அடி உயரத்தில் உள்ள இப்பகுதியில் வித்தியாசமான முயற்சியாகப் பனிக்கட்டி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்குச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி) அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற டி20 போட்டியில், சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணி, சாகித் அப்ரிடி தலைமையிலான ரோயல்ஸ் அணியை விளையாடியது.

ரோயல்ஸ் அணியில் சாகித் அப்ரிடி (தலைவர்), ஸ்மித், மேட் பிரையர், கல்லிஸ், ஒவாயிஸ் ஷா, கிராண்ட் எலியட், அப்துல் ரசாக், டேனியல் வெட்டோரி, நாதன் மெக்கல்லம், சோயிப் அக்தர், ஏ.சி. ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

டைமண்ட்ஸ் அணியில் சேவாக் (தலைவர்), ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஸகீர் கான், அஜித் அகர்கர், மஹேல ஜயவர்தன, டில்ஷான், மாலிங்க, மைக்கேல் ஹசி, முகமது கயிப், ரமேஷ் பொவார், ஜொகிந்தர் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

3

இதில் முதலில் டைமண்ட்ஸ் துடுப்பெடுத்தாடியது, அதற்கமைய சேவாக் 31 பந்துகளில் 62 ஓட்டங்களையும்.ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 31 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். டைமண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ரோயல்ஸ் அணியின் பந்துவீச்சில் அப்துல் ரசாக் 4 விக்கட்டுக்களையும், சோயிப் அக்தர் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ரோயல்ஸ் அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை பெற்றுஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயல்ஸ் அணி சார்பில் ஒவாயிஸ் ஷா ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், கல்லிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஒவாயிஸ் ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். (ஸ)

07

01 02

04 05 06

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>