மைத்ரி மஹிந்த ஆட்சியில் தொண்டமானுக்கு அமைச்சு பதவி – பெரியசாமி பிரதீபன்


DSC02364

மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகோர்த்து நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளுராட்சி சபைகளை தமது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கைகயை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருமனதுடன் வரவேற்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபைகள் 11 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கைப்பற்றிக் கொண்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஹட்டனில் நடைபெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு பிரச்சினை, மேலதிக கொடுப்பனவான நிலுவை பிரச்சினை மற்றும் அடிப்படை உட்பட அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு கடந்த மூன்று வருட காலமாக பாரியளவில் முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் பலத்தினை பெற்று தமது சக்தியை வெளிப்படுத்தி நாடளாவிய ரீதியில் மக்களின் ஆதரவை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயல்படுவதற்கான முடிவினை தக்க தருணத்தில் ஆறுமுகன் தொண்டமான் எடுத்துள்ள முடிவு சரியானது என நாம் அவரை வரவேற்கின்றோம்.

சுய லாபம் கருதாமல் மலையகத்தில் வாழ்கின்ற குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட நகர் மற்றும் கிராம பகுதி மக்களின் பின்தங்கியுள்ள அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு காத்திரமான கொள்கையுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயல்படுவதற்காக இவ்வாறு கைகோர்த்துள்ளமை வரவேற்கதக்க ஒன்றாகும்.

கடந்த மூன்று வருட காலப்பகுதியில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களினால் குறிப்பிடதக்க அபிவிருத்தி திட்டங்கள் ஏதேனும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அங்கமாக செயல்பட்ட இ.தொ.கா மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்து அபிவிருத்திகளை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தனது ஆதரவை வழங்கும்.

உள்ளுராட்சி சபை தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூன்று கோணங்களில் தேர்தலில் போட்டியிட்டது. கை சின்னத்திலும், வெற்றிலை சின்னத்திலும் இ.தொ.காவுடன் இணைந்து சேவல் சின்னத்திலும் போட்டியிட்டது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் அங்கமாக திகழும் ஐக்கிய தேசிய கட்சி அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஊடான பலர் நாட்டில் இடம்பெறுகின்ற உழல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்குகின்றார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை தேர்தல் பரப்புரையில் தெரிவித்து வந்தனர்.

இதன்போது மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளை வழங்கியுள்ளார்கள். எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நல்லாட்சி ஒன்றை உருவாக்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதேவேளை தோட்டப்பகுதிகள், கிராம பகுதிகள், நகர் பகுதிகள் என அபிவிருத்திகள் செய்யப்படுவதோடு, உருவாக்கப்படும் நல்லாட்சியில் இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையக பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியான அமைச்சும் வழங்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடந்து முடிந்த தேர்தலில் தோழ்வியை தழுவிக்கொண்டிருக்கும் பொழுது தான் தலைமை வகித்த பழமையான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியை தழுவுவதாக மனம் வருந்தி முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அதில் எந்தவித பொறுப்பையும் வகிக்காமல் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓர் ஆலோசகராக மாத்திரமே செயல்பட்டு வந்திருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்பினர்கள் இருக்கின்றமையினால் எதிர்வரும் காலத்தில் அணைவரும் இணைந்து ஒரு நல்ல தனி ஆட்சியை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.(கி/அ )

7 comments

  1. Ministry of pondamavan.

  2. Ministry of pondamavan.

  3. Ministry of pondamavan.

  4. மஹிந்தகலவெடுத்தபணம்டோண்டமான்கலவெடுத்தபணம்எல்லாம்இப்போது.வெளிவரும்

  5. மஹிந்தகலவெடுத்தபணம்டோண்டமான்கலவெடுத்தபணம்எல்லாம்இப்போது.வெளிவரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>