
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.
அதேவேளை, மேலும் சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தனி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்தது கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அதேவேளை, இன்றும் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.
அவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்தாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவுடன் இணைவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. (ஸ)