அரச கணக்காய்வாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை


d5b8901049aa099cf8ca320e737e61ca_L

அரச கணக்காய்வாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை இலக்காக கொண்டு கணக்காய்வாளரினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராகவே குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.

அதன்படி இம்முறை தேர்தலில் தற்போதைய அரசுக்கு எதிராக மக்கள் செயற்பட்டிருப்பது தெளிவாக விளங்குவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>