“ரணில் மஹிந்தவைப் பாதுகாக்கின்றார் என்பது உண்மையா”? – அமைச்சர் ராஜித விளக்கம்


Rajitha Senarathna

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நாம் எதிர்பார்த்தவாறு எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் இது எவறால் தடைப்பட்டது என்பதை தான் அறியவில்லையெனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாக்கின்றார் என்ற குற்றச்சாட்டொன்று சமூகத்தில் உள்ளது.  ஜனாதிபதியும் இதற்கு சார்பாக கருத்துத் தெரிவித்திருந்தார் என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.

ஜனாதிபதி இதனைக் கூறுகின்றார் எனின், அவருக்கும் ஏதாவது தெரிந்திருக்கும். ராஜபக்ஷாக்களுக்கும்  அவருடன் உள்ளவர்களுக்கும் எதிராகவுள்ள கொலை மற்றும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாம் எதிர்பார்த்த விதத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையென்பதுதான் உண்மை. இருப்பினும், எதிர்வரும் காலத்தில் இது சரியாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  (மு)

 

3 comments

  1. அதுதான் உண்மை

  2. Yes it’s true

  3. Yes it’s true

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>