மண்டையோடு நாய் நக்கும் – எபிக் தமிழனின் கலியுக காவியம்


1494673451_maxresdefault

குடிசையை கொளுத்திப்போட்டு கூரைக்குமேல ஏறி நிண்ட கதையாக கிடக்கு .காசு வேண்டின  கம்பெனிக்காரனுக்கும் விசுவாசம் இல்லை ஓட்டுப்போட்ட மக்களுக்கும் விசுவாசம் இல்லை ” என்று ஆரம்பித்து அதுதான் அரசியல் என்று விடை பகர்ந்து அரசியலின் இன்றைய சாணக்கியத்தனமற்ற சாதுர்யத்தை வெளிப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கின்றது ,அந்த ஒரு சம்பவம் தொடர்பான அரசியல் காய் நகர்த்தல்.

ஆம் நாம் இன்று வித்யாவை மறந்து விட்டோம். அதன்பின் முன் நிகழ்வுகளையும் மறந்து விடுவோம் .காலத்துக்கும் மறக்கவிடாமல் செய்கின்றது இந்த கலை வடிவம் . நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என என்னும் யாரொருவருக்கும் இது சாட்டையடிதான். என் வீட்டுப்பிள்ளையில்லை எனப் பெருமூச்சு விடும் யாராயினும் இனி ஆசுவாசம் கொள்ள முடியாது .அடுத்த ப்ராஜெக்ட் ஆரம்பிப்போம் என்ற வார்த்தைக்குள் நாம் எல்லோரும் விழித்திருந்தே ஆகவேண்டும் .இன்னுமொரு வித்தியாவை இந்த நாடு நிச்சயம் சந்தித்திராதிருக்க வேண்டும் என்ற இயக்குனரின் ஆவாவே இது எனலாம்
.
நடுத்தெருவில் மண்டை ஓடு நாய் ஒரு நாள் நக்கும் பாரு நெருக்கமானவர்களுக்கு இது புதியதல்ல. தண்டனைகள் வலுக்கும் போது இது நிகழ்ந்தே தீரும் .ஆள்பவர் தர மறுப்பின் ஆளப்படுபவர் செங்கோல் ஏந்த வேண்டும் தானே .அப்படித்தான் தோன்றுகின்றது இந்தபாடலின் தலைப்பு.

உயிருக்கு பயந்து ஓடுபவன் உண்மையை சொல்ல மாட்டான் இந்த நிலைதான் இன்றைக்கு தவறுகளுக்கு அடித்தளமாகிறது. கற்பு அழிக்கப்பட்டாலும் சரி இழக்கப்பட்டாலும் சரி  தமிழனுக்கு  அது கலாச்சாரம் . உயிர் என்பதை விடவும் அதீதமாய் கலாசாரத்தையும் மானத்தையும் வீரத்தையும் விரும்பிய பூமியில்
வாழ்ந்தோம். இன்று காதல் என்ற போர்வைக்குள் காமம் தீர்க்கும் தேவை நிறைக்கும் நிலையில் வாழ்கின்றோம்.
.
எதுவும் அறியாமல் தூண்டிலில் மாட்டிக்கொண்டு உயிர் துறக்கும் மீன்களை போல எதிர்பாராமல் சிக்கிக்கொண்டு வன்புணரப்படும் ஒரு சாராரை மட்டுமன்றி தெரிந்தே தவறிழைத்து பிறரை
ஏமாற்றுவோரையும் இந்த வரிகளும் கேமராவும் காட்சிப்படுத்த தவறவில்லை. நீ இப்படி வாழாதே நீ இப்படி தான் வாழ்வாய் என்றால் நாங்களும் இப்படிதான் என்பது எங்கோ எதிர்க்க துடிக்கும் ஓர் சமுதாயகுரலாகவே எனக்கு படுகின்றது.

தீமை வெல்லும் தர்மம் கொல்லும்”  தீமையின் வெற்றி தற்காலிகமானதே .இறுதியில்அதனை தர்மம் அழித்தே தீரும் என்று தவறுகளுக்கு எச்சரிக்கை ஒலித்திருக்கின்றதுபாடல் வரிகள் .தவறு செய்பவன் மட்டுமல்ல தவறை எதிர்ப்பவனும் தண்டனை தர துடிப்பவனும் இதே பூமியில் தான் வாழ்கின்றான்.
இப்படை சரித்திரம் மாற்றிவிடக் கூடும் ஒருநாளில்.
Music – இசை தீசன் வேலா
வரிகள்  ஜனக பேராண்டி  ஆரூரன்
சொல்லிசை Mc Ra, Young Kriz,
இயக்கம்  – Venu SK

நடிகர்கள் தமது பங்கை சிறப்பாகவே நிறுவியிருக்கின்றனர் .குறிப்பாக ஜெயில் கைதியாக
நடித்தவர் தனது தோற்றத்தால் மட்டுமல்ல செயல்களாலும் தன்னை நிறுவியிருக்கின்றார். மரங்களில் ஏறுவதாகட்டும் புகை அருந்துவதாகட்டும்  ஒரு மிருகத்தனம் விழித்திருக்கும் ஒரு மனிதனாய் வாழ்ந்திருக்கிறார் .வாழ்த்துக்கள் இவர்களுக்கு நிச்சயம் ஒரு சபாஷ்  சொல்லியே ஆகவேண்டும் .குறைகள் நூறு இருக்கட்டும் குறைகளைந்து  முதலில் நிறை பார்ப்போமே .காவியமும் தமிழும்
நெருங்கியவை இந்த காவிய தமிழர்களது  இசைப் பயணமும் காவியமாய் தொடரட்டும்.(ச)

– பெண்சிங்கம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>