ரஷ்ய இராணுவ விமானம் சிரியாவில் விபத்து, 32 பேர் பலி


image_c0d2b34d47

ரஷ்யாவின்  பயணிகள் தேவைக்காக பயன்படுத்தப்படும் இராணுவ விமானம் ஒன்று சிரியாவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 32 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாகும் போது 26 பயணிகளும், 6 பணியாளர்களும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

An-26  ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சிரியாவின் விமான நிலையமொன்றில் தரையிறக்கும் போதே இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவே ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>