எமது சமூகத்தை நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம்- அமைச்சர் ரிஷாட் சபையில் அறிவிப்பு


hqdefault

தமிழ் மக்கள் விடுதலையை வேண்டி ஆயுதத்தைக் கையில் எடுத்ததைப் போன்று எமக்கும் ஆயுதம் கையில் ஏந்தும் ஒரு நிலைமையை இந்த அரசாங்கம் ஏற்படுத்த வேண்டாம் என அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் வாழும் உரிமையுள்ளது. நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும். நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த அரசாங்கத்துக்கு சிறுபான்மையினர் தமது ஆதரவை வழங்கினர்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது எனவும், அதற்கு தான் பொறுப்புக் கூறுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும் அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் தலைமையிலான முஸ்லிம் எம்.பி.கள் குழுவொன்று  பாராளுமன்றத்தின் நடுவே அமர்ந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>