கஹட்டோவிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் ருவன்புர ஸ்ரீ விஜயாராம விகாராதிபதியுடன் சந்திப்பு


Discussionnn

தமது பிரதேச மக்களினால் எந்தவித பாதிப்புக்களும் கஹட்டோவிட்ட வாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட மாட்டாது என ருவன்புர ஸ்ரீ விஜயாராம புரான மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி தலம்பிட்டியே சுமங்கள தேரர் தெரிவித்தார்.

கஹட்டோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து நிட்டம்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தில்ருக்கின் ஆலோசனையின் பேரில் கஹட்டோவிட்ட பெரிய பள்ளிவாயல் முக்கிய பிரமுகர் சகிதம் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (10) காலை ருவன்புர ஸ்ரீ விஜயாராம புரான மகா விகாரையின் விகாராதிபதியைச் சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே விகாராதிபதி இதனைக் கூறினார்.

எமது கிராமத்து மக்கள் இதுவரை காலமும் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி அயல் கிராமத்து முஸ்லிம் மக்களுடன் சமாதானமான முறையில் வாழ்ந்து வருகின்றனர். இதனைச் சீர்குலைக்க எந்தவொருவருக்கும் நாம் இடமளிக்க மாட்டோம். வெளியில் இருந்து வந்து அசம்பாவிதங்களில் ஈடுபட்டாலே தவிர  எமது பிரதேசத்து சிங்கள மக்கள் அசம்பாவித நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் எனவும் விகாராதிபதி குறிப்பிட்டார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>