
கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட இனவாத வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முறைபாடுகளை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த தினங்களில் கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் இதுவரையில் முறைபாடுகள் பதிவு செய்யாதவர்கள் இருப்பின் உடனடியாக முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். (மு)