இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி


in

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது  கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6  விக்கெட்டுக்களால்  வெற்றியீட்டியது.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இலங்கை – இந்தியா அணிகள் மோதிக்கொண்டன.   நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய   அணி 17.3 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டி தாமதமாக ஆரம்பித்த காரணத்தால் 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>