ஜப்பானிலுள்ள முஸ்லிம் மத தலைவர்களை ஜனாதிபதி சந்தித்தார் (Photos)


03

ஜப்பானிற்கு அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் மத தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருகும் இடையில் சந்திப்பொன்று இன்று டோக்கியோ நகரின் இம்பேரியல் ஹோட்டலில் நடைபெற்றது.

யார் எவ்வித குற்றச்சாட்டுக்களை சுமத்தியபோதிலும் இலங்கையில் நிலையான சமாதானத்தை
ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதாகும் என்றும், அச்செயற்பாடுகளுக்கு தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுத்தரத் தயார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அண்மையில் கண்டி பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக இதன்போது கருத்துத்
தெரிவித்த ஜனாதிபதி, சகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இந்த சந்தர்ப்பத்தில் மிகச் சிறியதொரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட அமைதியின்மை தொடர்பாக தாம்
மிகுந்த கவலையடைவதாக தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவினர், 2015 ஜனவரி 08ஆம் திகதி இன, மத
பேதமின்றி சகல இலங்கையர்களும் இணைந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய பெரும் எதிர்பார்ப்பே காரணமாகும் என தெரிவித்தனர்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மலிக்
சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாறசிங்ஹ ஆகியோரும் இந்த
சந்திப்பில் கலந்துகொண்டனர். (ஸ)

01 02 03 04

10 comments

  1. Acting,double game,show man

  2. Dear brothers. We don’t trust this president. Big actor.

  3. Dear brothers. We don’t trust this president. Big actor.

  4. He is a double headed snake.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>