கண்டி வன்முறை : உயிரிழந்த மூவரின் சார்பில் ஆரம்பக்கட்ட இழப்பீடு வழங்கப்பட்டது


officers-between-district-special-communities-digana-central_addd02a4-21c7-11e8-81db-e6399ce35310

கண்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் உயிரிழந்த மூவருக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பனவும் இறுதிக் கிரியைகளுக்காக 15 ஆயிரம் ரூபாயும் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டி மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது உயிரிழந்தவர்களுக்கும், சொத்து சேதங்களுக்கும் துரிதமாக நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை வழங்கியிருந்தார்.

உயிரிழந்த மூவருக்காக ஆகக் கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் நட்டஈட்டை பெற்றுக் கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும், எஞ்சிய தொகையை வழங்குமாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன. (ஸ)

6 comments

  1. இவன் இலப்பிடு முக்கியம் இல்லை

  2. இவன் இலப்பிடு முக்கியம் இல்லை

Leave a Reply to Nawas Srilanka Nawas Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>