ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய தலைவர்


Rajasthan-Royals

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக அஜின்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகிய நிலையிலேயே ரஹானே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியுடனான போட்டியின் போது அணி வீரர் பந்தை சேதப்படுத்தியது தமக்கு தெரியும் என ஸ்மித் ஒப்பு கொண்டார். இதனையடுத்து அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன், அந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையிலேயே, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்மித் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>