ஸ்மித், வோனர் ஆகியோருக்கு 1 வருட போட்டித்தடை


671829-1

பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக இருந்த ஸ்டீவன் ஸ்மித் இற்கு 1 வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு தலைவர் பதவி வகிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அணியின் உப தலைவரான டேவிட் வோனர் இற்கும் 1 வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு தலைவர் பதவி வகிக்க முடியாது எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை பந்தை சேதப்படுத்திய அவுஸ்திரேலிய வீரர் பங்க்ரோப்ட் இற்கு 9 மாத கால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்மித், வோர்னர் ஆகியோர் ஐ.பி.எல். தொடரில் தமது அணிகளின் தலைமை பதவிகளை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>