அக்குறணை பிரதேச சபையின் புதிய தலைவர் இஷ்திகார் கடமைகளை பொறுப்பேற்றார்


20180409_101856-1

அக்குறணை பிரதேச சபைக்கு புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக ஒட்டகச் சின்னத்தில் போட்டியிட்ட நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பைச் (PMJD) சேர்ந்த இஷ்திகார் இமாதுதீன் இன்று (09.04.2018) அளவதுகொடையில் அமைந்துள்ள அக்குறணை பிரதேச சபையின் பிரதான காரியாலயத்தில் தனது பதவிக்குரிய கடமையை உத்தியோகபூர்வமாக பதவி ஏற்பு புத்தகத்தில் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டார்

இந்நிகழ்வுடன் இணைந்ததாக உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்ற சரத் அமரககோன் உத்தியோகபூர்வமாக பதவி ஏற்பு புத்தகத்தில் கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்ளும் நிகழ்வும் இடம்பெற்றது

பிரதேச சபையின் புதிய தலைவர் இஷ்திகார் இமாதுதீனில் பதவியேற்பின்போது அருகே அவரது தந்தை டி.ஜி.எ.எல். இமாதுதீன், பிரதேச சபையின் செயலாளர் ரி.எஸ்.ராஜபக்ச, பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.எம்.சிம்சான் உள்ளிட்ட ஏனைய பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

இவ்வைபவத்தில் மும்மத அனுஷ்டானங்களும் இடம்பெற்றதுடன் பிரதேச சபை காரியாலய உத்தியோகத்தர்கள், ஆதரவாளர்கள், பிரதேச வாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.(ச)

-ராபி சிஹாப்தீன்-

20180409_101856-1

20180409_104824

20180409_103350

20180409_104546

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>