
கடந்த 2017 ஆண்டு க.பொ.த சாதாரணதரப்பரீட்சையில் தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலம் 100% சித்தி பெற்றுள்ளதுடன், குறித்த பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக எம்.ஆர்.எம். முஷரிப் என்ற மாணவன் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பரீட்சையில் சித்தியடைந்த மாணவனையும், ஏனைய சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.சுஹைர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிலியந்தலை வலையக்கல்விப்பணிப்பாளர் திருமதி.எஸ்.குணசேகர கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக அவ்வலையத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ். பிரியதர்சினி கலந்துகொண்டார்.
குறித்த பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(ச)