செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்


bees-on-mars-1522738515

செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோபோ’ தேனீகளை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே ‘ரோவர்’ கருவியை நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள போதும், அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளைப் பூமிக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் இருப்பதாகவும், சில நேரங்களில் தகவல்கள் சரியாக இருப்பதில்லை என்பதாலும் குறித்த திட்டத்தைக் கைவிட்டு ரோபோ’ தேனீகளை அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு ‘மார்ஸ் பீஸ்’ எனப் பெயரிட்டுள்ளனர். இவை 3 முதல் 4 சென்டி மீட்டர் வரை அளவு கொண்டது.

இந்தத் தேனீ ரோபோவில் சிறிய கேமரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தேனீயிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி அங்குப் பறக்க வைக்கலாம். 20 இற்கும் மேற்பட்ட ‘ரோபோ’ தேனீகள் அனுப்பப்படவுள்ளன.

இவற்றில் சிறிது நேரம் தான் சார்ஜ் இருக்கும். இதனால் அங்கு இதனுடன் ஒரு ரோவர் அனுப்பப்பட உள்ளது. இதை வைத்து அனைத்து ரோபோக்களுக்கும் ‘சார்ஜ்’ செய்ய முடியும். எரி பொருள் செலவும் மிகக் குறைவாகும். இந்த ‘ரோபோ’க்கள் இன்னும் 2 வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>