ஐ.தே.கட்சிக்கு ஸ்ரீ ல.சு.கட்சி இடமளிக்க வேண்டியது தார்மீகக் கடமையாகும்- எஸ்.பீ.


S.B. Dissana3

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி அரசாங்கமொன்றைக் கொண்டு நடாத்துவதற்கு இடமளிப்பது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தார்மீகக் கடமையாகும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற இராஜினாமா செய்த 16 அமைச்சர்களின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொண்டு அவர்கள் தமக்கு பெரும்பான்மைப் பலம் இருப்பதாக நிரூபித்துள்ளனர். இதற்கு மேலாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அரசாங்கம் அமைப்பதற்கு ஐ.தே.கட்சி முக்கிய பங்காற்றியுள்ளது. இதுபோன்ற காரணங்களினால் ஐ.தே.கட்சிக்கு தனியரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு இடமளிக்க வேண்டும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் தேசிய அரசாங்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போனதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>