
பண்டைய காலம் முதல் நிலவி வந்த இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பலப்படும் வகையில் புத்தாண்டை கொண்டாட சகல இன மக்களும் நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும் என வரகாகொட ஞானரத்ன அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேரர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சகோதரத்துடன் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றன. இருப்பினும், இடைக்கிடையே இந்த நல்லுறவை பாதிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றாலும், அதனை நீண்ட தூரம் பயணிக்க விடாமல், இருந்த நல்லுறவை கட்டியெழுப்பி வாழ்ந்துள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் நிகழ்வுகளை தூக்கிப் பிடித்து, இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல் நிலை உள்ளதாக காட்டுவதற்கு சிலர் செயற்படுகின்றனர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு ஒரே தினத்தில் அமையப் பெற்றுள்ளமை, இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனவும் மகாநாயக்கர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். (மு)