சீனாவில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்


32bc297b707be7f6415fff1f6a9b6d82_L

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சீனாவிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

சீன இலங்கை தூதுவராலய வளாகத்தில் இடம்பெற்ற இக்கொண்டாட்டங்களில் புது வருட பிறப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் சம்பிரதாய விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

சீனாவின் இலங்கைக்கான தூதுவர் பேராசிரியர் கருணாசேன கொடிதுவக்கு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் சீனாவில் தொழில் புரியும், கல்வி கற்கும், வேறு நடவடிக்கைகளுக்காக சீனாவில் தங்கியிருக்கும் 500 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வுகளில் இடம்பெற்ற விளையாட்டு போட்டிகளில் சீன நாட்டவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டதுடன் இந்த நிகழ்வுகளின் பரிசுப்பொருட்களுக்கு சீனாவின் வெவ்வேறு நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன.

குறித்த நிகழ்வினை சீன இலங்கை தூதுவராலயம் மற்றும் “சைனா ஸ்ரீலங்கா யூத்” ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>