திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கான புதிய மாணவர் அனுமதி – 2018


Fathih Institute of Sri Lanka

அரச சார்பற்ற பல்கலைக்கழகத்தை நோக்கி பயணிக்கும் திஹாரிய பாதிஹ் கலாபீடத்துக்கு 2018 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற ஆண் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 21, 22 /04/2018 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கலாபீட வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

5 வருட விசேட கற்கை நெறிகளை வழங்கும் பாதிஹ் நிறுவனம் முதல் இரண்டு வருடங்களும் அறபு, ஆங்கிலம், சிங்களம் மற்றம் தமிழ் போன்ற மொழிகள் உட்பட திறன்விருத்தி, ஆன்மீகப்பயிற்சி நெறிகளை வழங்குவதோடு குறிப்பாக க.பொ.த. உயர்தர கலை மற்றும் வர்த்தகப்பிரிவுக்கான பரீட்சைக்குத் தயார்படுத்தப்படுவர்.

இறுதி 03 வருடங்களும் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பாடங்கள் போதிக்கப்படுகின்ற, அதே காலப்பகுதியில் அரச, அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் BA, BBA, ACC, CIMA, AAT போன்ற கற்கை நெறிகளுக்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

இது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் 0763505752, 0776000606 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பாதிஹ் கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் தெரிவித்துள்ளார். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>