ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்


1396100118375591512858864

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லாறிஜனி ( Ali Larijani) தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கு இந்தவாரம் விஜயம் செய்யவுள்ளது.

இவர்கள் நேற்றையதினம் ஈரானின் தலைநகர் தெஹரானிலிருந்து புறப்பட்டுள்ளனர். வியட்நாமுக்கு சென்றுள்ள இவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாளை மறுதினம் (18) இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

குறித்த விஜயத்தின் போது இரண்டு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ,இருதரப்பு நல்லுறவு தொடர்பிலான விடயங்களை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>