சிரியாவின் மீதான தாக்குதலை வரையறுத்தது நாமே- பிரான்ஸ் ஜனாதிபதி


image_918458171f

அமெரிக்க இராணுவத்தை சிரியாவிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூறிய போது, சிரியாவில் அமெரிக்க இராணுவம் இருக்க வேண்டும் என்ற தேவையை எடுத்துக்கூறி டிரம்பின் முடிவை மாற்றியமைத்தது நானே என பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவம் சிரியாவில் தொடர்ந்தும் கண்காணிப்பை வைத்திருக்க வேண்டும் என நான் டிரம்புக்கு தெளிவுபடுத்தினேன் என பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி சேவையொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியொன்றில் இதனைக் கூறியுள்ளார்.

சிரியா ஜனாதிபதி பஷீர் அல் அஸாதை பதவி நீக்குவதற்கோ, சிரியாவின் சிவில் யுத்தத்தில் தலையிடுவதற்கோ தமக்கு எந்தத் தேவையும் இல்லை. இருப்பினும், நாம் தாக்குதல் நடாத்தியது சிரியாவின் இரசாயன ஆயுத களஞ்சியசாலை மீதே ஆகும் எனவும் அமெரிக்காவும், பிரித்தானியாவும், பிரான்ஸும் அறிவித்துள்ளன.

குறிப்பிட்ட இலக்குகள் மீது மாத்திரம் தாக்குதல் நடாத்த வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆரம்ப கட்ட திட்டத்தில் இருக்கவில்லையெனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரசாயன ஆயுத களஞ்சியசாலைகள் மற்றும் குறித்த இலக்குகள் மீது மாத்திரம் தாக்குதல் நடாத்த வேண்டும் என வரையறையிட வேண்டும் என நாமே டிரம்புக்கு எடுத்துக் கூறினோம் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மெக்ரோன் மேலும் கூறியுள்ளார்.  (மு)

One comment

  1. அடப்பாவிகளா ஒரு நாட்
    டை அழிக்க என்று புறப்
    பட்டு போனபின் நான்
    தான் அவருக்குக்கூறினேன்
    என்பதெல்லாம் ஏனடா
    அதான் பலமக்களை கொ
    ன்று அழித்து விட்டீர்களே
    பின்னே ஏன் நான்…நீ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>