அதிவேக நெடுஞ்சாலை விபத்துக்கு காரணம் என்ன? – எஸ். ஓபநாயக்க


highway7

புத்தாண்டு காலப் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்களுக்கு முகம்கொடுத்த சுமார் 80 வாகனங்கள் இதுவரையில் அதிவேக பாதையோரம் எங்கும் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிவேக பாதையின் செயற்பாட்டு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிவேக பாதையில் ஏற்படும் விபத்துக்களுக்கு பிரதான காரணங்களாக, சாரதியின் தூக்கம், மதுபோதையில் வாகனம் செலுத்தல், வாகனங்களை உரிய தரப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சாலைக்குள் பிரவேசிக்க விடுதல் என்பன உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி புத்தாண்டு சுபநேரம் முடிவடைந்தவுடன் கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 40 ஆயிரம் வாகனங்கள் அதிவேக பாதைக்குள் பிரவேசித்துள்ளதாகவும் இதன் போது எட்டு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் 24 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களை அதிவேக பாதையில் பிரவேசிக்கச் செய்யுமுன்னர் அதன் ஓட்ட தகுதியை பரிசேதனை செய்து கொள்ளுமாறும், தூக்கத்தின் போது வாகனம் செலுத்துவதை தவிர்ந்து கொள்ளுமாறும் பணிப்பாளர் மேலும் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>