Huawei P20 Pro இம்மாதம் இதில் இலங்கை சந்தைக்கு


ff

இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தக நாமங்கள் மத்தியில் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற Huawei மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Huawei P20 Pro என்ற பிரதான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது.

உலகில் முக்கேமராவைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட்போனாக Huawei P20 Pro திகழ்வதுடன், அதன் முக்கேமராத் தொகுதியில் அதிநவீன செயற்கை புலனாய்வுத் தொழில்நுட்ப உள்ளிணைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அறிமுகமாகின்ற முதலாவது ஸ்மார்ட்போனாக Huawei P20 Pro அமைந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படுகின்ற இது, பாரம்பரியமான அனைத்து பிரதான வர்த்தகநாமங்களையும் தகர்த்து, ஒரு முன்னணி உற்பத்தி என்ற பாராட்டையும் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் ஒரு மாதத்திற்கு முன்னரே வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2018 ஏப்ரல் மாதத்தின் முடிவில் இது இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

உலகில் முதலாவது Leica முக்கேமராவை Huawei P20 Pro கொண்டுள்ளதுடன், இச்சாதனம் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயற்கை புலனாய்வுடனான நவீன தொழில்நுட்பத்தையும், கலைவடிவத்தையும் கொண்டுள்ள நிலையில், புதுமையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வாழ்வில் அனைவருக்கும் வழங்கவுள்ளது. Huawei P20 Pro இன் அறிமுகத்துடன், தொழில்சார்ரீதியான தரத்துடன் படங்களை வசப்படுத்தும் ஒரு இலகுவான அனுபவத்திற்கான வாய்ப்பினை Huawei அனைவருக்கும் வழங்கவுள்ளது.

ff

நவீன ஸ்மார்ட்போன்களில் அதிகூடிய மொத்த pixel எண்ணிக்கையைக் கொண்டுள்ள உலகின் முதலாவது முக்கேமராவை Huawei P20 Pro கொண்டுள்ளது. பின்புற கேமரா தொகுதியானது 40MP RGB sensor, 20MP monochrome sensor மற்றும் 5x Hybrid Zoom உடன் telephoto lens கொண்ட ஒரு 8MP sensor ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக படங்கள் மிகவும் பிரகாசமானவையாகவும், துல்லியமான விபரங்களுடனும், மகத்தான zoom தரத்துடனும் வசப்படுத்தப்படுகின்றன. HUAWEI P20 Pro ஆனது செயற்கைப் புலனாய்வு ஒப்பனை மற்றும் 3D portrait lighting ஆகியவற்றுடன் 24MP செல்ஃபி கமெராவைக் கொண்டுள்ளதுடன், சரும தொனி சீர்செய்தல், சுவாரசியமான முகத் தோற்றம் மற்றும் யதார்த்தமான 3D அம்ச மேம்பாடுகளுடன் அழகிய செல்ஃபி படங்களை எடுக்க உதவுகின்றது.

HUAWEI P20 Pro ஆனது நம்ப முடியாத அளவில் அழகிய வர்ணங்களை வெளிக்கொணரும் 6.1” OLED Display இனைக் கொண்டுள்ளதுடன், 18.7:9 என்ற Aspect Ratio உடன் புதிய HUAWEI Full View Display இன் பலனாக ஈடுஇணையற்ற, உன்னதமான அனுபவத்தைத் தருகின்றது. P20 Pro ஆனது 6GB RAM மற்றும் 128GB ROM அளவுடனான internal storage மற்றும் 4,000mAh battery ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், Kirin 970 artificial intelligence chip, fingerprint sensor மற்றும் bezel-less display ஆகிய முக்கியமான தொழில்நுட்ப அம்சங்களையும் இப்புதிய வடிவத்தில் கண்டுகொள்ள முடியும். இப்புதிய சாதனமானது அழகிய, ஊதா மற்றும் நீல வர்ணங்களின் சாயல் கொண்ட “Twilight” வடிவில் வெளிவருகின்றது.

இதன் அறிமுக நிகழ்வில் Huawei Device Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு அவர்கள் உரையாற்றுகையில், ´இந்த புரட்சிகரமான உற்பத்தியை இலங்கையில் அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். உலகின் முதலாவது முக்கேமராவுடன் வெளிவந்துள்ள இச்சாதனம், எமது பிரதான உற்பத்தி வரிசையில் தனித்துவம் வாய்ந்த ஒரு சேர்க்கையாகும். Huawei P20 Pro ஆனது முன்னணி உற்பத்தி வரிசை விலைகளில் கிடைக்கப்பெறவுள்ளதுடன், இதன் அறிமுகமானது தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கள் மற்றும் நுகர்வோரின் நடத்தைகளை ஈடுசெய்யும் வகையில் எமது உற்பத்தி வரிசையை மேலும் ஸ்தாபித்துக்கொள்ள இடமளிக்கும்,´ என்று குறிப்பிட்டார்.

Screen Shot 2018-04-21 at 2.15.22 PM p20_pro.0

Huawei-P20-Pro-Press-Render-Leak-1

2 comments

  1. Maznun Masfi

  2. Maznun Masfi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>