நவமணி – ரமழான் பரிசு மழை : 5ஆவது பரிசளிப்பு விழா (PHOTOS)


1st Place

நவமணிப் பத்திரிகை, ஜம்மியத்துஷ் – ஷபாப் நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய ரமழான் பரிசு மழைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் கடந்த வியாழக்கிழமை (19) ஜம்மியத்துஷ் – ஷபாப் பிரதிப்பணிப்பாளர் எம். எஸ்.எம். தாஸிம் மௌலவி தலைமையில் ஷபாப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் 1ஆம் பரிசான உம்ரா பயணத்தை ஹன்தெஸ்ஸ – சனீஹா காசிம் பெற்றுக் கொண்டதோடு, 2ஆம் பரிசான மடிக்கணனியை தர்காநகர் – சாகிரா பாஹிம் மற்றும் 3ஆம் பரிசான கையடக்கத் தொலைபேசியை வெல்லம்பிடிய – எம். எச்.ஹாதியும் பெற்றுக் கொண்டனர்.

கட்டுரை எழுதும் போட்டியில் காத்தான்குடி ஏ. எல்.எம். சித்தீக் 1ஆம் பரிசினையும் இஸட். ஏ. ரஹ்மான் 2ஆம் பரிசினையும் ஜே.டி. எஸ். ஜெஸீலா 3ஆம் பரிசினையும் பெற்றனர்.

அத்தோடு, பாலமுனை – எம். எச். சுபைதீன், சாய்ந்தமருது – எம். றிம்ஸாத், சில்மியாபுர – எச். பத்ஹுல்லாஹ், வெலம்பொட – ஏ.ஏ. நுஃமான், கல்முனைக்குடி – எஸ். எம். சதீம், இராஜகிரிய – யூ. எல். றிப்கா, காத்தான்குடி – ஐ. ஏ. றஸ்ஸாக், கொச்சிக்கட – ஐ.எம். இர்ஸாத், மருதானை – ரீ. ஆர். டிவாங்ஸோ, கள் – எலிய – பி. எம். லீனா, சம்மாந்துறை – ஆர். எம். தாரிக், நாவலப்பிடிய – எம்.பாத்திமா, வெலிகம – எம். எஸ். எம். யுஸ்ரி, கிண்ணியா – ஐ. இல்யாஸீன், ஹொரவப்பொத்தான – எம். கே. பஸீலா, மாவனெல்ல- எம். எஸ். ஸஷா, ஒலுவில் – இஸட். அப்துர்ரஹ்மான், சாய்ந்தமருது – ஏ. அஸ்பா, கொழும்பு – 15 – எம். நஜாத், கண்டி – எம்.இஸட். அஸ்லஹ், கொச்சிகட – எம். டி. எம். தன்வீர், கந்தளாய் – ஆர். றஸ்மியா ஆகிய 22 பேர் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தபால் துறை அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம், கௌரவ அதிதிகளாக தேசிய நல்லிணக்க, ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, அல் – குர்ஆன், சுன்னா கற்கைக்கான இளவரசர் ஹாமித் பின் அப்துல் அஸீஸ் அல் – சவூத்தின் தாயார் சங்க பொது அலுவலகத்தின் மேற்பார்வையாளரான முஹம்மத் றியால் அஸ்ஸெய்லானி (சாதிக் ஹாஜியார்) நவமணிப் பத்திரிகையின் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம். டி. எம். றிஸ்வி, வட மேல் மாகாண உறுப்பினரும் ஸ்கை வேல்ட் நிறுவனஉரிமையாளருமான சஹாப்தீன் ஹாஜியார், புரவலர் ஹாசிம் உமர், சிட்டி கார்டன்ஸ் பணிப்பாளரும் தலைவருமான ஹில்ரூ எம். சித்தீக், மெகா நிறுவன உரிமையாளர் பௌமி, அஷ் – ஷெய்க் முஹம்மத் நிஷாத், Gift Way உரிமையாளர், அல் – ஹசன்அஸ்அத் ஸகரிய்யா, மனித நேயன் இர்ஷாத் ஏ. காதர், நௌபர் மௌலவி, இம்ரான் மௌலவி ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இன்போது வரவேற்புரையை ஜம்மியத்துஷ் – ஷபாப் நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் மௌலவி எம். எஸ். எம். தாஸிம்நிகழ்த்தினார். நவமணிப் பத்திரிகையின் ஸ்தாபகர் எம். டி. எம். றிஸ்வி, அல் – குர்ஆன், சுன்னா கற்கைக்கான இளவரசர்ஹாமித் பின் அப்துல் அஸீஸ் அல் – சவூத்தின் தாயார் சங்க பொது அலுவலகத்தின் மேற்பார்வையாளரான முஹம்மத் றியால்அஸ்ஸெய்லானி (சாதிக் ஹாஜியார்), அல் – ஜன்னத் இஸ்லாமிய மாத இதழின் ஆசிரியர் அஷ்ஷெய்க் எஸ். கமால்தீன் (மதனி)ஆகியோர் நிகழ்வில் விஷேட உரையாற்றினர்.

பரிசுமழையில் 1ஆம் பரிசான உம்ரா பயணத்தை ஹன்தெஸ்ஸ – சனீஹா காசிம் பெற்றுக் கொண்டார். இப்பயணத்தை ஒருமஹ்ரமி இல்லாமல் நிறைவேற்ற முடியாது. தூரப்பயணத்திற்கு இஸ்லாம் மஹ்ரமி ஒருவருடன்தான் தனது பயணத்தைமேற்கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறியுள்ளது. இதனை நன்கு உணர்ந்த றியால் அஸ்ஸெய்லானி (சாதிக்ஹாஜியார்), அப்பெண் தனது கணவருடன் உம்ரா பயணத்தைத் தொடர்வதற்கான அனைத்து செலவுகளையும் தான்பொறுப்பேற்பதாகக் குறிப்பிட்டு, இந்நிகழ்வில் கணவன் – மனைவி இரண்டு பேரும் சேர்ந்து ஒன்றாக உம்ரா செய்வதற்கானவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

கல்விமான்கள், உலமாக்கள், வர்த்தகப்பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், நவமணி உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். (நு)

– எம்.எஸ்.எம்.ஸாகிர், ஏ. எஸ்.எம்.ஜாவித் –

1st Place2nd place 3rd place ajsgh article 1st as dasda sad sdad

haleem

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>