இராஜதந்திர ஊடகவியல் தொடர்பான சர்வதேச பயிற்சிநெறி அங்காராவில் ஆரம்பம்


31718865_2080606808624885_7896453517232046080_n

துருக்கி அனடோலு ஏஜன்சி ஊடக நிறுவனத்தின் இராஜதந்திர ஊடகவியல் பயிற்சி நெறி கடந்த திங்கட்கிழமை துருக்கி தலைநகரான அங்காராவில் அமைந்துள்ள அனடோலு ஊடக நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆரம்பமானது.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆபிரிக்க பிராத்தியங்களிலுள்ள 15 நாடுகளைச்சேந்த ஊடகவியலாளர்கள் இந்த பயிற்சிநெறியில் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், உதவி பொருளாளர் மற்றும் டெய்லி சிலோன் அலுவலக செய்தியாளர் நுஸ்கி முக்தார் ஆகியோர் இந்தப் பயிற்சிநெறியில் பங்கேற்றுள்ளனர்.

துருக்கி பிரதமரின் கீழ் இயங்கும் துருக்கியின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனத்துடன் Turkish Cooperation and Coordination Agency (TIKA) இணைந்து அனடோலு ஏஜன்சி இந்த பயிற்சி நெறியை நடாத்துகின்றது.

இந்த பயிற்சி நெறியானது சர்வதேச ஊடகவியலாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளல், பிராந்தியத்தின் நாடுகளுக்கும், துருக்கியின் பிராந்தியக் கொள்கை அணுகுமுறைக்கும் இடையில் இராஜதந்திர உறவு தொடர்பான அறிவை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதோடு, ஏனைய நாடுகளின் இராஜதந்திர ஊடகவியலை தமது நாட்டுடன் ஒப்பிட்டு ஆராயக்கூடிய சந்தர்ப்பத்தையும் வழங்குகின்றது.

இராஜதந்திர ஊடகவியல், சக்தி இராஜதந்திரம் (Energy Diplomacy), சூழலியல் அரசியல், நாடுகளுக்கிடையிலான கலாச்சார, அரசியல் கட்டமைப்பு, பிராந்திய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும், தீர்வுகள் போன்ற தலைப்புகளில் சர்வதேச விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களால் இந்த பயிற்சி நெறியின் போது விரிவுரைகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரு வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சி நெறியின் ஓர் அங்கமாக துருக்கியின் வெளிவிவகார அமைச்சு, கலாசார அமைச்சு அரச மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த பிரதேசங்களுக்கும் பங்கேற்பாளர்கள் விஜயம் செய்யவுள்ளனர். (ஸ)

– துருக்கியிலிருந்து அலுவலக செய்தியாளர் நுஸ்கி முக்தார் –

31718865_2080606808624885_7896453517232046080_n 31781830_2080607108624855_2105435991186604032_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>