மூத்த முஸ்லிம் தலைவர் பௌசிக்கு ஏன் இந்தப் புறக்கணிப்பு?


a h m fowzie

நல்லாட்சி அரசின் மூன்றாவது அமைச்சரவை மாற்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான மூத்த அரசியல்வாதியும், மூத்த முஸ்லிம் தலைவருமான ஏ.எச்.எம்.பௌசி கவனத்திலெடுத்துக்கொள்ளப்படாமை இப்போது அரசியல் களம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு விடயமாகியுள்ளது.

அமைச்சர் பௌசி 1958இல் உள்ளூராட்சி அரசியல் மூலம் அரசியலுக்குப் பிரவேசித்து கொழும்பு மேயராக சந்திரிகா, மஹிந்த அரசியல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பின்பு சிரேஷ்ட அமைச்சராகப் பணிபுரிந்து மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசியல் ஜனாதிபதியின் கீழுள்ள தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க இராஜாங்க அமைச்சராகப் பணிபுரிந்து வந்தார்.

புதிய அமைச்சரவை மாற்றத்தின் கீழ் ஜனாதிபதி இதுவரை காலமும் வகித்த நல்லிணக்க அமைச்சு அமைச்சர் மனோ கணேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் பௌசி வகிக்கும் அமைச்சுப் பதவி எது என்பதுகூட தெளிவாக இல்லை. அடுத்தவராம் வெளிவரும் எனக்கூறப்படும் வர்த்தமானியாவது இது பற்றி தெளிவுபடுத்துமா என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அமைச்சர் பௌசி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் மறைவுக்குப் பின் அக்கட்சியிலிருக்கும் ஒரே மூத்த தலைவர், ஸ்ரீலங்கா சுதந்திர முஸ்லிம் பிரிவின் தலைவர், பாராளுமன்றத்திலுள்ள பல்வேறு குழுக்களின் தலைவராகப் பணிபுரிந்தவர். அவர் ஸ்ரீலங்கா, சுதந்திரக் கட்சியினைச் சார்ந்திருந்தாலும் பல்வேறு அரச நிகழ்வுகளில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருந்து வருகிறார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்த ஒரு தலைவராவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுடன் குடியுரிமை பறிக்கப்பட்டவருமாவார். அப்படிப்பட்ட ஒருவருக்கு இம்முறைகூட ஓர் அமைச்சுப்பதவி வழங்கப்படாமை பெரும் பாரபட்சமாகவே நோக்கப்படுகின்றது. தேசிய கட்சிகளை நம்பியிருப்போருக்கு இது தான் கிடைக்கும் பரிசு எனக்கருதி இன, மத கட்சிகளுக்கு ஆதரவு வழங்க மக்கள் தள்ளப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். நடவடிக்கைகள் இப்படியிருக்கச் சிறுபான்மை மக்கள் இனவாதமாகச் செயற்படுகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டுவதில் நியாயம் இருக்கின்றதா?

ஜனாதிபதியும், பிரதமரும் அமைச்சர் பௌசிக்கு அமைச்சரவையில் உரிய இடம் வழங்குவதற்கு அக்கறைகாட்ட வேண்டும். இதேநேரம் அமைச்சரவை மாற்றத்தில் நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு இரண்டாகப் பிரிக்கப்பட்டு நல்லிணக்க அமைச்சு தன் அமைச்சுப் பதவிகளை சிறப்பாக மேற்கொண்டு மனோகணேசனுக்கு வழங்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் யாப்பில் இந்த இரு அமைச்சும் ஜனாதிபதி வகிக்க வேண்டுமென்றே கூறப்படுகின்றது. இந்த இரு அமைச்சுகளும் ஒன்றாகவே இயங்க வேண்டும். தேசிய நல்லிணக்கமும் ஒருங்கிணைப்பும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த இந்த அமைச்சு, பிரிந்து இயங்குவது கணவனும், மனைவியும் விவாகரத்துச் செய்தது போன்றதாகும். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடியது ஒரு சிறுபான்மை அமைச்சரை விட பெரும்பான்மை சிங்களவர் ஒருவருக்கே முடியுமானது. இந்த அமைச்சு ஜனாதிபதியிடமோ அல்லது பிரதமரிடமோ இருக்க வேண்டும். அப்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இலகுவாக இருக்கும்.

நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றத்தில் திருகோணமலை மாவட்டம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்திற்குக் குறைந்த பட்சம் ஒரு பிரதி அமைச்சர்கூட இல்லை என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். (ஸ)

– சிரேஷ்ட ஊடகவியலாளர் – என்.எம். அமீன் –

9 comments

  1. Now home rest good. …

  2. இவருக்கு ஒரு அமைச்சு தேவயா . மறைந்த மாமனிதர் தலைவர் ் அவருக்கே சவால் விட்டவர்

  3. unwanted issue for medias, let him relax, let us thing about young generation and their participatio in politics in future.

  4. Plz retired sir. This is the right time

  5. எல பௌசி என ஒரு காலம் இருந்தது இப்போதெலாம் ஏலாத பௌசி…..என்றபடியாள் அமைச்சுகள் அற்ற அமைச்சை கொடுக்க போவதாக கேள்வி….

  6. Aenna ewaruku kodutu aenna sanji erukuraan ondu solugga papom

  7. காலவதி யாகிவிட்டார்

  8. மூத்த முஸ்லீம் தலைவரல்ல.மூத்த முஸ்லீம் என்று பதிவிடவும்.MR.ADMEN.

  9. மூத்த முஸ்லீம் தலைவரல்ல.மூத்த முஸ்லீம் என்று பதிவிடவும்.MR.ADMEN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>