இனக்கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிணை வழங்கப்படா- அமைச்சர் வஜிர


WAJIRA_0

கண்டி இனக்கலவரத்திற்கு எந்தவகையிலும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள்  அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று(13) நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட மாட்டாது. சிலர் கூறலாம் தாம் எந்தக் குற்றமும் செய்யவில்லை, பாதையில் இருந்த போது கைது செய்யப்பட்டதாக. அறிந்து கொள்ளுங்கள். குற்றச் செயல்கள் இடம்பெறும் இடங்களில் கூட்டங்களாக சேர வேண்டாம். அவ்வாறான வேளைகளில் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம். சம்பவ இடங்களில் கூட்டம் கூடுவதும் அசம்பாவிதங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவே அமையும்.

பிணை வழங்காது கைது செய்யப்பட்டாலேயே இந்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசாங்கத்தினால் முடியும். எதிர்காலத்திலும், இனவாத சம்பவங்களுடன் யாராவது தொடர்புபட்டால், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

10 comments

 1. Sayed Abdulcader Mashoor

  ஏன் BBS கைது செய்யப்பட முடியவில்லை.

 2. நம்பலாமா

 3. Mohamed Salfiyar Salfiyar

  நண்றி

 4. BBS kaithu senja ithana pere kaithu seyya wendi warathu ponnayanuvol

 5. Very good sir thanks

 6. When bbs Secretary arrest?

 7. nalla mudwu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>