கல்லொழுவை அல் – அமானில் சாதாரணதரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு


Screen Shot 2018-05-15 at 12.56.17 PM

அல் – அமான் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDC), பழைய மாணவர் சங்கம் (OBA) மற்றும் கல்லொழுவை கல்வி முன்னேற்றக் கழகம் (EDF) ஆகியவற்றின் அனுசரணையில், இம்முறை மினுவாங்கொடை – கல்லொழுவை, அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து க.பொ.த. (சா/த) ப் பரீட்சை எழுதி, 9 – ஏ, 8 – ஏ, 7 – ஏ சித்திகளைப் பெற்ற மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தெரிவான மாணவர்கள், பணப் பரிசில்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இது தொடர்பிலான நிகழ்வு, அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் எம்.எச்.எம். காமில் தலைமையில், நேற்று (14) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

இம்முறை 9ஏ பெற்ற எம்.என்.எம். நஜாத் எனும் மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும் விருதும், 8ஏ பெற்ற மாணவிக்கு 5 ஆயிரம் ரூபா பணப்பரிசும் விருதும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், 7ஏ சித்திகளைப் பெற்ற மற்றும் உயர்தரத்திற்குத் தெரிவான அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பரிசளிப்பு வைபவத்தில், மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் (தமிழ் மொழி) எஸ்.எம். பதுருத்தீன் பிரதம அதிதியாகவும், கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். முனாஸ் சிறப்பு அதிதியாகவும் மற்றும் அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
– ஐ. ஏ. காதிர் கான் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>