இந்திய இராணுவ தலைமை அதிகாரி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு


645034d93626287e2c5bcfee8ce3803c_L

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவ்ட் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இந்திய இராணுவ தலைமை அதிகாரி, அவரின் பாரியார் திருமதி. மதுலிகா ராவ்ட் ஆகியோர் உள்ளிட்ட குழு ஏழு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் மற்றும் இந்திய இராணுவ தலைமை அதிகாரி ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியான மேஜர் ஜெனரல் டீ.ஏ.ஆர் ரணவக்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>