”சுவாசம்” கலை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக ஜனாதிபதி பங்கேற்பு


02 (5)

”சுவாசம்” என்ற கருப்பொருளின் கீழ் பிஷப் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று (15) பிற்பகல் நடைபெற்ற தமிழ் கலை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

இந்திய உயர் ஸ்தானிகராலயமும் அருள் ஸ்ரீ கலையகமும் இணைந்து இந்த கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கலை நிகழ்ச்சியை நெறியாள்கை செய்த கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மற்றும் இசை நடன கலைஞர்களுக்கு ஜனாதிபதி நினைவுப் பரிசுகளை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.(அ)
03 (4)

04 (2)

05 (3)

06 (1)

08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>