முள்ளிவாய்க்கால் சென்று திரும்புவோருக்கு குடிபானங்கள் வழங்கிய இராணுவம்


625.500.560.350.160.300.053.800.900.160.90

நாட்டில் 30 வருடங்களாக ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ள நிலையில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பும் மக்களுக்கு களைப்பை தீர்க்கும் முகமாக இராணுவத்திர் குடிபானங்களை வழங்கி வழியனுப்பி வைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட குடிபானங்களை மக்கள் பருகிச்சென்றதுடன் சிலர் புறக்கணித்தும் சென்றுள்ளனர்.

யுத்த வெற்றியை கொண்டாடும் முகமாகவா இவ்வாறு குடிபானங்கள் வழங்கப்படுகிறது என இராணுவத்தினரிடம் ஊடகவியலாளர்களால் வினவப்பட்டபோது,

இன்றைய தினம் முல்லைத்தீவில் துக்கதினம் கடைப்பிடிக்கப்படுவதால் கடைகள் அனைத்தும் பூட்டியுள்ளன. நினைவேந்தலை கடைப்பிடிக்கும் மக்களுக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம்.

நிகழ்வுகளுக்காக பல்வேறு இடங்களிலிருந்தும் வந்துள்ளனர். அவர்களுக்கு செய்யப்படும் சிறிய உதவியாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். மற்றும்படி இதனை ஒரு யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வாக ஒருபோதும் ஏற்பாடு செய்யவில்லை.

நாம் என்றும் விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானவர்களேயென்றி மக்களுக்கு எதிராளிகள் இல்லை. இறந்துபோன மக்களின் உணர்வினை மதித்து இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்” என இராணுவத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

One comment

  1. Mohamed Ifthikar Alam

    Lets live in peace…one nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>