குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்


1526639570-air-port-L

குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் நேற்று ஆரம்பித்த தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (18) காலை 9 மணியளவில் அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன மற்றும் குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>