ஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் மரணம் வரும்- மருத்துவ ஆய்வு


images

ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது மரணத்தைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என  மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமர்ந்திருப்பவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நூற்றுக்கு 48 வீதமான ஆண்களும் 94 வீதமான பெண்களும் மரணமடைவதற்கான ஆபத்தை அதிகம் கொண்டவர்களாக காணப்படுவதாகவும்  கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், எல்லா தரப்பினரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கடமையாற்றுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்குப் பின்னரும் ஒரு முறை நடக்க வேண்டும் எனவும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர்களும் ஒரே இடத்தில் இருந்து விளையாடுவது மற்றும் அமர்ந்திருப்பது என்பவற்றை தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வைத்திய நிபுணர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

4 comments

  1. 100% பொய்
    பாடசாலை மாணவர்கள் 7 மணித்தியாலம் இருக்கிறார்கள்

  2. சரி அமராவிட்டால் மரணம் விட்டுவிடுமா? ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச்சுவைத்தே ஆகவேண்டும்

  3. பைத்தியம் பலவகை அதில் இது ஒருவகை

  4. Talyvary appa 8 many neram paduttal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>