ரமழானில் பிறந்தநாள் கேக் வெட்டியமைக்கு மன்னிப்புக் கோரிய பாகிஸ்தான் வக்கார் யூனுஸ்


younis

புனித ரமழான் மாதத்தில் மகிமையைப் புறக்கணித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளுக்கு பகல் வேளையில் பகிரங்கமாக கேக் வெட்டியதற்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனுஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இங்கிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்த போட்டியின்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசிம் அக்ரமின் 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வக்கார் யூனுஸ் கேக் வெட்டியுள்ளார்.

வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். புனிதமிக்க ரமழான் மாதத்தையும், நோன்பாளிகளையும் மதித்திருக்க வேண்டும். இதற்காக மன்னிப்புக் கோருகின்றேன் எனவும் வக்கார் யூனுஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திருந்தது. இதற்காகவே இவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.  (மு)

New Picture

2 comments

  1. அடுத்த ரமழான்ல வெட்டாம முழுசா திண்ண சொல்லுங்க.

  2. அடுத்த ரமழான்ல வெட்டாம முழுசா திண்ண சொல்லுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>