முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்


1528339632-West-Indies-L

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்ப்பாக இன்றைய போட்டியில் ஷேன் டாவ்ரிச் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும், ஷாய் ஹோப் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமார 3 விக்கெட்களையும், சுரங்க லக்மால், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>