முஸ்லிம்களின் கோபத்தைத் தணிக்க கருமமாற்ற தவறினோம்- கோட்டாப


Gotabaya Rajapaksa

கடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (08) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் முஸ்லிம்கள் அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சித்தனர் என்பது இரகசியமல்ல. இதற்காக வேண்டிய உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பல முயற்சிகளை முன்னெடுத்தனர்.

சமூகத்துக்குள் பரவிய பல்வேறு விதமான பொய்யான பிரச்சாரங்கள்,  முஸ்லிம்களைக் கோப மூட்டக் கூடிய நடவடிக்கைகள் என்பன திட்ட மிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் ராஜபக்ஷ ஆட்சியின் மீது முஸ்லிம்களுக்கு குரோதத்தை ஏற்படுத்த ஒரு குழு முயற்சி செய்தது.

உண்மை நிலை அவ்வாறல்ல. இதன் பின்னால் உள்ள உண்மை நிலையை எம்முடன் நெருக்கமாக இருந்த முஸ்லிம் தலைவர்கள் விளங்கியிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளுக்கு நாம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்யாதிருந்ததனால், இதனைப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு வாய்ப்பு உருவாகியது எனவும் அவர் மேலும் கூறினார்.  (மு)

 

9 comments

  1. Poi padam 😡. Iwar baba

  2. Poi padam 😡. Iwar baba

  3. Kalla mudevi

  4. Mohamed Salfiyar Salfiyar
  5. Mohamed Masahir Mohamed Masahir

    Iwan janathipathi ahak kuodathu

  6. Poda ne ellam muslim kalukku sayda aniyayam marakka mudiyazu unakku konjam mullu kadikra naye kottam erukku anda naye kotattukita poye sollu….

Leave a Reply to Ahamad Zaroshan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>