கிம்-டிரம்ப் சந்திப்பு இன்று


5242

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிங் ஜொங் உன் ஆகியோருக்கிடையிலான  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று(12) சிங்கப்பூரில் சம்பிரதாயபுர்வமாக இடம்பெறுகின்றது.

வட கொரியா அணு ஆயுதங்களை கைவிட வேண்டுமென அமெரிக்காவின் கோரிக்கையை வட கொரிய ஜனாதிபதி ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. ஐ.நா.வின் உத்தரவையும் மீறியே வடகொரியா பல தடவைகள் அணு ஆயுதப் பரிசோதனைகளை நடாத்தியது.

அமெரிக்காவின் இந்தக் கோரிக்கைக்குப் பதிலாக அமெரிக்காவிடம் வட கொரியா முன்வைக்கும் பதிலை வைத்தே இந்தப் பேச்சுவார்த்தையின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படப் போகின்றது.

கிம் மற்றும் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் சிங்கப்பூரில் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கி இருந்த போதிலும், அவ்விரு இடங்களும் வெகு தொலைவில் இல்லையெனவும் கூறப்படுகின்றது.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>