பேருவளை,அலுத்கம கலவரம் – சேதமடைந்த சொத்துக்களுக்கு விசேட இழப்பீடு


9654b4ece7e04bae9c79057f9f684426_L

பேருவளை, அலுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களினால் சேதமடைந்த சொத்துக்களுக்கு விசேட இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டில் பேருவளை மற்றும் அலுத்கம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பொதுமக்கள் குழப்பநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டவிதிகளின் கீழ் வழங்கக்கூடிய ஆகக்கூடிய இழப்பீட்டுத்தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எனினும், இதன்மூலம் உள்ளடக்கப்படாத வீட்டுத்தளபாடங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு அமைவாக மேலும் செலுத்தவேண்டும் என்று மாவட்ட செயலாளர்களினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட மதிப்பீட்டுக்குழுவினால் சிபார்சு செய்யப்பட்டுள்ள கொடுப்பனவை செலுத்தும் வகையில் 155.9 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்காக மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>