ஞானசார தேரரை விடுதலை செய்யாது போனால், மொத்த பௌத்தர்களும் வீதிக்கு வரும்- சிஹல ராவய


sihala rawaya

ஞானசார தேரரின் தண்டனை குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கண்டுகொள்ள வில்லையென்றால், ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயாராக உள்ளதாக சிஹல ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோமாகம  நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மகால் கந்த சுதந்த தேரர்  ஊடகங்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

பௌத்த பிக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்படும் வரை எமது போராட்டத்தை நிறுதப்போவதில்லை. ஞனசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தாலும், எதிர் காலத்தில் அவர் இல்லாமல் போனாலும் அவரது குரல் என்றும் ஓயப்போவதில்லை.

ஞனசார தேரர் விரைவில் விடுதலை செய்யப்படுவார். அதற்காக எந்த மட்டத்திலும் சென்று போராட நாம் தயாராகவுள்ளோம். எவ்வாறிருப்பினும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் பற்றி பேசுவதை நிறுத்தப்போவதுமில்லை. அதனை யாராலும் நிறுத்தவும் முடியாது எனவும் தேரர் மேலும் கூறினார்.  (மு)

4 comments

  1. வீதியில்.வாகணத்துக்கு.அடிபட்டுசாவும்.நாட்டின்மக்கள்தொகைகுறையவேண்டும்

  2. நல்லாட்சி தேங்கா திருவையா கூட்டு எதிர் கட்சி இனவாதிக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் ?

  3. Warum warum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>