அமானா வங்கியின் புதிய கிளை நாளை கடுகஸ்தொட்டையில் திறந்துவைப்பு


amana bank

வங்கித்துரையில் முன்னோடியாக திகழும் அமானா வங்கி தனது சேவைகளை கண்டி மாவட்டத்தின் கடுகஸ்தொட்டை நகரிற்கு விரிவுபடுத்தும் முகமாக அதன் கிளையொன்றினை இலக்கம் 93 குருனாகலை வீதி, கடுகஸ்தொட்டை எனும் முகவரியில் நாளை 25ஆம் (25.06.2018) திங்கள் கிழமை மு.ப 10.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அதன் கிளை முகாமையாளர் எம். பவாஸ் அன்சார் குறிப்பிட்டார்.

இப்புதிய வங்கிக் கிளை தனித்துவமானதும் பாதுகாப்பானதுமான வங்கிச் சேவையின் வித்தியாசமான அனுபவத்தை கடுகஸ்தொட்டை நகர மற்றும் பிரதேச வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய வங்கி கொள்கைக்கமைய செயற்பட்டு வரும் அமானா வங்கியினால் வழங்கப்படும் நடைமுறைக் கணக்கு, சேமிப்புக் கணக்கு, வெளிநாட்டு நாணயக் கணக்கு, சிறுவர் சேமிப்புக் கணக்கு, கால முதலீட்டு கணக்கு, வீடமைப்பு நிதியுதவி, குத்தகை வசதிகள், சிறிய மற்றும் நடுத்தர வியாபார வங்கிச் சேவைகள், நிறுவன வங்கிச் சேவைகள், வர்த்தக சேவைகள், திறைசேரிச் சேவைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இப்போது இவ்வங்கிக் கிளையினூடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

அமானா வங்கி அதன் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இவ்வங்கி கிளை ஊடாக தினமும் 24 மணிநேரமும் பணப்பரிமாற்றம் செய்யக்கூடிய பாதுகாப்பான எ.ரி.எம் (ATM) தன்னியக்க இயந்திர வாங்கிச் சேவைகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முகாமையாளர் மேலும் தெரிவித்தார். (நு)

-ராபி சிஹாப்தீன்-

2 comments

  1. Halal intrest edutha innam branch open panna elum 🤣🤣🤣

  2. Why ? What is the deference between Amana and ordinary Bank ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>