அமானா வங்கியின் புதிய கிளை கடுகஸ்தொட்டையில் திறந்துவைப்பு (Photos)


IMG_20180627_143440

வங்கித்துறையில் முன்னோடியாக திகழும் அமானா வங்கியினால் தனது சேவைகளை கண்டி மாவட்டத்தின் கடுகஸ்தொட்டை நகரிற்கும் விரிவுபடுத்தும் முகமாக அதன் கிளையொன்று இலக்கம் 93 குருனாகலை வீதி, கடுகஸ்தொட்டை எனும் முகவரியில்கடந்த 25.06.2018 அன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இப்புதிய வங்கிக் கிளை தனித்துவமானதும் பாதுகாப்பானதுமான வங்கிச் சேவையின் வித்தியாசமான அனுபவத்தை கடுகஸ்தொட்டை நகர மற்றும் பிரதேச வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் கிளை முகாமையாளர் எம். பவாஸ் அன்சார் தெரிவித்தார்

இஸ்லாமிய வங்கி கொள்கைக்கமைய செயற்பட்டு வரும் அமானா வங்கியினால் வழங்கப்படும் நடைமுறைக் கணக்கு, சேமிப்புக் கணக்கு, வெளிநாட்டு நாணயக் கணக்கு, சிறுவர் சேமிப்புக் கணக்கு, கால முதலீட்டுக் கணக்கு, வீடமைப்பு நிதியுதவி, குத்தகை வசதிகள், சிறிய மற்றும் நடுத்தர வியாபார வங்கிச் சேவைகள், நிறுவன வங்கிச் சேவைகள், வர்த்தக சேவைகள், திறைசேரிச் சேவைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இப்போது இவ்வங்கிக் கிளையினூடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

அமானா வங்கி அதன் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இவ்வங்கி கிளை ஊடாக தினமும் 24 மணிநேரமும் பணப்பரிமாற்றம் செய்யக்கூடிய பாதுகாப்பான எ.ரி.எம் (ATM) தன்னியக்க இயந்திர வங்கிச் சேவைகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமானா வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) மொஹம்மத் அஸ்மீர் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு நாடாவை வெட்டி திறந்து வைப்பதையும் அருகே கிளை முகாமையாளர் எம்.பவாஸ் அன்சார், சிரேஷ்ட பிரதி தலைவர் எம்.எம்.எஸ்.குவிலிந், வங்கி உத்தியோகத்தர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம். (நு)

– ராபி சிஹாப்தீன் –
IMG_20180627_143440

IMG-20180627-WA0006

IMG-20180627-WA0005

IMG-20180627-WA0009

DSC04769

FB_IMG_1529976098808

FB_IMG_1529976082446

 

IMG_20180627_143624

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>