சாய்ந்தமருதில் சமூக நலன் விடயங்களை உள்ளடக்கிய திட்டம் அங்குரார்ப்பணம்


FB_IMG_1530993701003

சாய்ந்தமருது ரெட் மெக்ஸ் (RED MAXX) அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் நோக்கங்களை தெளிவூட்டும் நிகழ்வும் நேற்று (07) சாய்ந்தமருது சீ. பிரீஸ் ரெஸ்டுரண்டில் இடம்பெற்றது. இதேவேளை, சமூக நலன் விடயங்களை உள்ளடக்கிய திட்டமொன்றின் ஆரம்ப நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

ரெட் மெக்ஸ் அமைப்பின் தலைவர் ஏ.எம்.ஏ.நிஸார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக நலன்புரி, கல்வி, விளையாட்டு ஆகிய 3 விடயங்களை மையப்படுத்தி கொடிகள் மற்றும் சீருடை அறிமுகம் என்பனவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். சலீம் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஸ்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர் எம்.எஸ்.எம். முஸர்ரப், மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் எம்.என்.எம்.டில்சாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பொறியியலாளர் எம்.ஐ.றியாஸ், ஊடகவியலார் எஸ்.ஜனூஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் மற்றும் சமூக ஆர்வலர்கள், பாடசாலை அதிபர்கள் கல்வியலாளர்கள் இளைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். (நு)

– எம்.என்.எம்.அப்ராஸ் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>