வவுனியா வாழவைத்த குளத்தில் இராணுவத்தினர் அடாவடி


9e80c121-7a64-45da-b493-07d51cc79a98

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மதவாச்சி , மன்னார் பிரதான வீதியில் வாழவைத்த குளம் கிராமத்துக்குச் சொந்தமான அல் ஹிஜ்ரா விளையாட்டு மைத்தனத்தில் அப்பகுதியிலுள்ள இராணுவத்தினரால் விவசாய பயிர் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது.

கடந்த 2009ம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து வருகை தந்திருந்த மக்களைத் தங்க வைப்பதற்கான தற்காலிக அகதி முகாம்கள் அமைக்கும்பொழுது குறித்த கிராம மக்களது காணிகள் இராணுவத்தினரால் பெறப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படாத நிலையில் இந்த செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு தமது காணிகள் மற்றும் பொது விளையாட்டு மைதானம் என்பவற்றை விடுவிக்குமாறு கோரி வீதியை மறித்து மக்கள் போராட்டம் நடாத்திய நிலையில் விளையாட்டு மைதானம் மாத்திரம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய நிலங்களைச் சுற்றி வேலிகளை அமைத்து இது இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் எனவும் பதாகைகள் வைக்கப்பட்டது.

பின்னர் குறித்த மக்களது காணிகளில் விவசாயம் மேற்கொண்ட இராணுவத்தினர் அறுவடை செய்த தானியம், மரக்கறி வகைகளை வாழவைத்த குளம் கிராம சந்தியில் விற்பனை நிலையம் அமைத்து அவைகளை விற்றும் வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த விவசாய கழிவுகளும் மைதானத்தில் கொட்டப்படுவதானது மிகுந்த வேதனையளிப்பதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு தீர்வு ஒன்றையும் பெற்றுத்தரவேண்டும் எனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>