நோர்வூடில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு


DSC09774

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென். ஜோன்டிலரி பகுதியில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று (09) காலை 9 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியில் உள்ள தேயிலை மலைக்கு வேலைக்கு சென்றவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

30 அல்லது 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (நு)

– க.கிஷாந்தன் –

DSC09780

DSC09774

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>