UPDATE : தாய்லாந்து குகை – மற்றுமொரு சிறுவன் மீட்பு


tt 2

தாய்லாந்து குகையில் காணாமல் போன சிறுவர்களை மீட்கும் பணிகளில் இன்றைய நாள் மீட்புப் பணியில் முதலாவது சிறுவர் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்றுவிப்பாளர் கடந்த ஜூன் 23ம் திகதி சிக்கிக்கொண்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மீட்கப்பட்ட ஒரு சிறுவனுடன், இது வரை 5 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச மற்றும் உள்நாட்டு சுழியோடிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

தொடர்புபட்ட செய்தி : தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பம் – 4 சிறுவர்கள் மீட்பு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>