உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கு


fifa world cup

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் அரையிறுதி ஆட்டம் இன்று (10) இரவு ரஷ்யாவின் புனித பீட்டர்ஸ் பேர்க் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி 11.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பிக்கவுள்ளது.

இன்றைய போட்டியில் பிரபல பலம் வாய்ந்த அணிகளான பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் என்பன மோதவுள்ளன. பெல்ஜியம் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், உலகக் கிண்ணப் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும் வரலாற்று வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும். கடந்த 32 வருடங்களின் பின்னர் பெல்ஜியம் அரையிறுதிப் போட்டிக்கு முகம்கொடுத்துள்ளது.

பிரான்ஸ் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் 3 ஆவது வாய்ப்பை வரலாற்றில் பெற்றுக் கொள்கின்றது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>