1976 இன் பின்னர் மீண்டும் தூக்குத் தண்டனை: அமைச்சரவை இன்று அனுமதி


1531201684-death-sentence_2

போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நாட்டில் மீண்டும் தூக்குத் தண்டனையை செயற்படுத்த இன்று (10) கூடிய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர இதனைக் கூறியுள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வரலாற்றில் ஒருவரை நிலையாக நிற்க வைத்து கொலை செய்தல், தலையைத் துண்டித்து கொலை செய்தல், தண்ணீரில் அமிழ்த்து கொலை செய்தல் உட்பட மரண தண்டனை முறைமைகள் காணப்பட்ட போதிலும், முதல் முறையாக ஒருவரை தூக்கில் தொங்க வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது 1812 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 10 ஆம் திகதியே ஆகும்.

இலங்கையில் கடைசியாக ஒருவருக்கு மரண தண்டனையாக தூக்கில் போட்டது 1976 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஆகும். அன்று முதல் கடந்த 42 வருடங்களாக தூக்குத் தண்டனை நாட்டில் அமுலில் இருக்க வில்லை.

நாட்டுச் சட்டத்தின் படி, அரசுக்கு எதிராக சதி செய்தல், இராணுவ கிளர்ச்சி செய்தல், போதைப் பொருள் வியாபாரம், கொலை செய்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   (மு)

 

 

 

 

17 comments

 1. மிகவும் எதிர்பார்ப்புடன் இ௫ந்த நாட்டு மக்களுக்கு இனிப்பான செய்தி
  உடனுக்குடன் நிறைவேற்றப்படல் வேண்டும்

 2. கருணை கத்தரிக்காய் மனு என்று இல்லாமல் செய்து விடுவார்கள்

 3. No it’s just

 4. Good job

 5. இது சரிபாட்டு வராது
  காடும் போக்கு பௌத்த அமைப்பின் பேயரில் ஜனாதிபதி கருணை கொடுத்து விடுவர்.

 6. Great Decision.

 7. Mohamed Nisber Junaideen

  Good move

 8. இந்த சட்டத்தை உடன் அமுலுக்கு கொண்டுவரவேண்டும்.

 9. வரும் ஆனா வராது

 10. Mini maranekata neda

 11. இந்த சட்டத்தை உடன் அமுலுக்கு கொண்டுவரவேண்டும்.

 12. மிகவும் எதிர்பார்ப்புடன் இ௫ந்த நாட்டு மக்களுக்கு இனிப்பான செய்தி
  உடனுக்குடன் நிறைவேற்றப்படல் வேண்டும் Good move

 13. முதல்ல இப்ப இறுக்குர அரசியல் தலைவர்களை போட வேண்டும் தூக்கில் 😡

 14. Really very good

 15. Good

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>